என் தாய்மொழி
என் நாவில் எட்டிப்பார்க்ககூட
தடைபோடும் வேலை!
போலியான புன்னகையொன்றை
நிரந்தரமாய் என் முகத்தில்
ஒட்டிவிட்ட வேலை!
சரித்திரம் படைக்கவேண்டும்
புரட்சியாய் புறப்படவேண்டும்
தேசத்தை நிமிர்த்தவேண்டும்
எனும் கனவையெல்லாம்
கம்ப்யூட்டரில் கட்டிபோட்ட வேலை!
காந்தி விரட்டிய வெள்ளையன்
இரவில் நித்திரை கான
என் நித்திரை கலைக்கும் வேலை!
இங்கே கற்றதையும் பெற்றதையும்
வெளிநாட்டு டாலருக்கு
அடகுவைத்துவிட்ட வேலை!
குவியலாய் இறுகிப்போன
இந்த வெறுப்பையெல்லாம்
சுக்குநூறாய் சிதறடித்தது
"இருதுளி கண்ணீர்" !
"ரொம்ப சந்தோசமா இருக்குடா"
முதல்மாச சம்பளத்தை நீட்ட
தாயின் கண்ணில் தோன்றிய
ஒரு துளி!!
"ரொம்ப கஷ்டமா இருக்குடா"
வெகுநாளாய் வேலை தேடும்
நண்பனின் கண்ணில் தோன்றிய
"மற்றொரு துளி"!!!
- நன்றிகள் பல படைப்பாளிக்கு!

No comments:
Post a Comment